கடந்த சட்டசபை கூட்ட தொடரில் சட்டமன்ற உறுபினராக இருக்கும் கொங்கு நாடு தேசிய கட்சியின் பொது செயலாளராக இருக்கும் ஈஸ்வரன் பேசிய பேச்சால் மக்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் , நாட்டு பற்று கொண்டவர்கள் , மற்றும்  தியாகிகளின் சொந்தங்கள்  ஈஸ்வரன் மீது கடும் கோபத்தில் இருகின்றார்கள்.

ஈஸ்வரன் சட்டசபையில் பேசியது: கடந்த கவர்னர் உரையை நான் பார்த்தேன். கடைசியிலே, ‘நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்’ என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த கவர்னர் உரையிலே, அந்த ஜெய்ஹிந்த் இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

அதாவது இந்த ஈஸ்வரன் மனதில் ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை பிடிக்காத வார்த்தை என்பதை அழுத்தமாக சட்டசபையில் பதிவு செய்கின்றார். இந்த ஈஸ்வரனுக்கு தேசபக்தி என்றால் என்ன என்றே தெரியாமல் பேசி இருக்கின்றார். அதற்கு திராவிட ஆட்களும் முட்டு கொடுத்து வருகின்றார்கள்.

 

சரி யார் இந்த ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை உருவாக்கியது ? அதை முன்னாள் முதல்வர் கருணாநிதி வாயால் பேசியதை கீழே பார்ப்போம்: செண்பகராமன் என்பது, தனித்துச் சொல்லப்பட்ட பெயரல்ல; ஜெய்ஹிந்த் செண்பகராமன்என்று தான் அவரை அழைத்தனர். 1907ம் ஆண்டிலேயே அவர் இந்த முழக்கத்தை செய்தவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின், ஐ.என்.ஏ., படை இந்த முழக்கத்தை பின்னால் செய்தது என்றாலும் கூட, இந்த முழக்கத்தை துவங்கி வைத்தவர், செண்பகராமன். வரலாறும் அப்படித்தான் சொல்கிறது.கடந்த 1907ல், நாமெல்லாம் பிறக்காததற்கு முன்பே, செண்பகராமன் ஒரு பெரிய குடும்பத்திலே பிறந்தவர்; கற்றுணர்ந்தவர்.

 

அயல்நாட்டு பிரமுகர்களான லெனினுடன், ரஷ்ய, ஜெர்மானிய தலைவர்களுடன் பழகியவர். ஹிட்லருடன் இவர் நட்பு பாராட்டி வாழ்ந்த காலத்தில், பேச்சு வாக்கில் ஹிட்லர், இந்தியர்களை பற்றி இழிவாக பேசி விட்டார். அதற்காக அவர் செண்பகராமனிடத்தில் மன்னிப்பு கேட்டார்.அப்படிப்பட்ட வீரம் செறிந்த செண்பகராமன், திருவனந்தபுரத்தில் தோன்றி, தமிழகத்தில் வாழ்ந்து, சென்னை கோட்டை வரை, ‘எம்டன்’ கப்பலில் வந்து, குண்டு போட்டு இன்றும், எம்டன் பேசப்படும் அளவிற்கு பெரும் காரியத்தில் ஈடுபட்டார்.அவரை, இதற்கு மேல் வாழவிடக் கூடாது என்பதற்காக, ஜெர்மானியர்கள், அவருடைய உணவில் மெல்ல கொல்லும் விஷத்தைக் கலந்து, அதன் காரணமாக அவர் உயிர் விட்டார் என்ற, வரலாற்று குறிப்பும் உள்ளது. இந்த சிலையின் வாயிலாக, அவர் எவ்வளவு கம்பீர மானவர், வீரத்தன்மை வாய்ந்தவர், நெஞ்சழுத்தம்கொண்டவர் என்பது, விளங்குகிறது என்று கலைஞர் கருணாநிதி பேசி இருக்கின்றார்.

 

இந்த ஜெய் ஹிந்த் செண்பகராமன் என்ற தியாகிக்கு அடையார் கிண்டி காந்தி மண்டபத்தில் சிலை மற்றும் மணி மண்டபம் அமைத்து இருக்கின்றார். இந்த வரலாறு தெரியாமல் அவையில் புதியதாக பதவி ஏற்ற சபாநாயகர்  அப்பாவு மற்றும் முதல்வர் ஸ்டாலின் அமைதியாக சட்டசபையில் இருந்தது வேதனையான விஷயம்.

சரி இவர்கள் தான் இப்படி என்றால் இதவிட மோசமாக காங்கிரஸ்காரர்கள் பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் வேடிக்கை பார்த்தனர் எனது கொடுமை.