வாழப்பாடி.சாலை விதிமீறலை மீறிய தனியார் பேருந்து மற்றும் கல்குவாரி லாரியால் கோர விபத்து....ஆறு பேர் பலி....


வாழப்பாடி அருகே சொகுசுப் பேருந்தில் பயணிகள் ஏறிய போது பின்னே வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆறு பேர் பலி, மூவர் படுகாயம் வாழப்பாடி டிஎஸ்பி தலைமையில் போலீசார் விசாரணை:100 அடி அடித்து இழுத்து உடல் நசுங்கி பலி:

 
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பேரூராட்சி மன்ற அலுவலகம் முன்புசேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரவிந்த் என்ற தனியார் சொகுசு பேருந்துநெடுஞ்சாலையிலே விதிமுறைக்கு புறம்பாக நிறுத்தி பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்தபோது  பின்புரம் வாழப்பாடியிலிருந்து எம்சேன்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரி அதிவேகமாக வந்து அடிச்சு நொறுக்கியதில் சம்பவ இடத்திலே 100 அடி இழுத்து ஏரி சென்றதில் ஆறு பேர் பலி,

 

 இது குறித்து வாழப்பாடி டிஎஸ்பி சுவேதா தலைமையில், ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமா சங்கர், மற்றும் ஏத்தாப்பூர் போலீசார் போலீசார்,வருவாய் துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணைஈடுபட்டு வருகின்றனர்:

 


பெத்தநாயக்கன்பாளையம் 15வது வார்டு திருநாவுக்கரசு (63) இவரது மனைவி விஜயா (60) மகன் ரவிக்குமார்(41) ஆறுகளூர் பகுதியை சேர்ந்த செந்தில்வேலன் (46) சுப்பிரமணி சொகுசு பேருந்தின் கிளீனர் சேலம் பனமரத்துபட்டி தீபன் (23) உள்ளிட்ட ஆறு பேர் பலி.

 

மேலும் இரண்டு பேர் மாதேஸ்வரி (57) இவரது மகன் ஜெயப்பிரகாஷ்(40) ஆகியோர் படுகாயம் அடைந்து வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் உறவினர்கள் 6 பேரும், மற்றும் பேருந்து கிளீனரும் இறந்த சம்பவம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,

 

இதுகுறித்து ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா சம்பவ இடத்தில் நேரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார் 

 


இதில் 12 மணியளவில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் போக்குவரத்து சர்வீஸ் சாலை வழியாக மாற்றி விடப்பட்டு சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக வாழப்பாடி டிஎஸ்பி தலைமையில் போலீசார் மற்றும் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

 

 மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஜியா உயிரிழப்பு,

கணவன் மனைவி மகன் உயிரிழந்த சோகம் பெத்தநாயக்கன்பாளையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆ.ப.செந்தில்குமார் . வாழப்பாடி. பெத்தநாயக்கன் பாளையம் .