சங்ககிரி துணை வட்டாட்சியர்கள் பணியிடை மாற்றம்


சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த துணை வட்டாட்சியர்களை பணியிடம் மாற்றம் செய்து சேலம் மாவட்ட மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அதிரடி உத்தரவு

சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியளாக பணிபுரிந்து வந்த ஜெயக்குமார் எடப்பாடி தேர்தல் துணை வட்டாட்சியராகவும்,எடப்பாடி தேர்தல் துணை வட்டாட்சியர் ரமேஷ் சங்ககிரி மண்டல துணை வட்டாட்சியராகவும், சங்ககிரி தேர்தல் துணை வட்டாட்சியர் சிவராஜ் எடப்பாடி மண்டல துணை வட்டாட்சியராகவும், எடப்பாடி மண்டல துணை வட்டாட்சியர் மகேந்திரன் சங்ககிரி தலைமையிடத்து துணை வட்டாட்சியராகவும், சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வி பதவி உயர்வு பெற்று சங்ககிரி தேர்தல் துணை வட்டாட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.