சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே அரசு பேருந்து சிறை பிடிப்பு. பள்ளி மாணவியர் ஓட்டுனர் இழித்து பேசியதால் பெற்றோர்கள் போராட்டம்.

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் பெரிய சோரகை பகுதியில் இருந்து மாணவ மாணவியர் தாரமங்கலம் அரசு பள்ளிக்கு சென்று பயின்று வருகின்றனர். இந்த அரசு பேருந்தில் ஓட்டுநராக செல்பவர் முருகேசன்..இவர் மாணவியரை கடும் சொற்களால் வசை பாடியும் இழிவாக பேசியும் வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியர் தாரமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளனர்.

போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஓட்டுநரின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவியர் பெற்றோர்களிடம் கூறி அலுவலர் பள்ளிக்குச் செல்ல மறுத்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்காத தால் மாணவியர் பள்ளிக்கு அனுப்ப விருப்பமில்லாத பெற்றோர்கள் இன்று காலை மேட்டூரில் இருந்து நங்கவள்ளி வழியாக தாரமங்கலம் சென்ற அரசு பேருந்து சிறை பிடித்தனர். தகவல் அறிந்த தாரமங்கலம் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் சம்பவ இடத்திற்கு சென்றார். பெற்றோர்களுடன் பேச்சு நடத்தினார் ஓட்டுநர் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தொலைபேசி வாயிலாக உறுதி அளித்தார். இதனை அடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் காரணமாக 2 மணி நேரம் தாரமங்கலம் நங்கவள்ளி சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் ரூ.18 லட்சத்திற்கு கொப்பரைத் தேங்காய் ஏலம்..

ஜலகண்டபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் உள்ளது.

இங்கு வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் கொப்பரை தேங்காய் ஏலம் விடப்படும்.

ஜலகண்டபுரம் , எடப்பாடி மற்றும் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இன்று 500 மூட்டை கொப்பரை தேங்காய் ஏலத்திற்கு வந்தது. முதல் தரம் கிலோ ரூ.75.50 க்கும், 2 ம் தரம் ஒரு கிலோ ரூ.64.00 க்கும் ஏலம் போனது. இன்று ஒரே நாளில் ரூ.18,00,000 கொப்பரைத் தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டது.

இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த பெயிண்டர் கைது.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் குளிக்கும்போது வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்த அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் (வயது 40) என்ற பெயிண்டர் செல்போனில் வீடியோ எடுத்ததை பார்த்து உறவினர்கள் பிடித்துக் கொண்டனர்.

பின்னர் தேவதாஸ் சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டான்.

இவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.