சங்ககிரியை அடுத்துள்ள வெள்ளூற்று பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற இச்சம்பவம் குறித்து தேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....


சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட சூரிய மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வெள்ளூற்று பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை அன்று அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சௌந்திரராஜ பெருமாள் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் சனிக்கிழமை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் இக்கோவிலில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வைத்திருந்த போதிலும் அதனையும் பொருட்படுத்தாமல் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது சம்மந்தமாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தேவூர் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இக்கோவிலில் புரட்டாசி மாதங்களில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து செல்வது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்ககிரி செய்தியாளர் முத்து.

சேலம், நெத்திமேடு அருகே உள்ள குப்தா மெஷின் ரோடு பகுதியில் பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளங்குழந்தை குப்பைத்தொட்டியில் வீசி சென்ற அவலம்.


சேலம் மாநகராட்சி பணியாளர்கள் வழக்கம்போல் பணி செய்ய வந்த போது உயிரிழந்த நிலையில் குப்பைத்தொட்டியில் இருந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்து அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பெயரில் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குழந்தையை வீசி சென்ற நபர் யார் என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பிறந்து சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் அப் பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை என்பதால் ஆணா பெண்ணா என்பது தெரியாமல் உள்ளது . சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் வீடு வீடாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்வராஜ்  செய்தியாளர், இளம்பிள்ளை.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குமாரபாளையம் ஊராட்சியில் பெரியசாமி என்ற விவசாயி வீட்டில் 20 கோழிகள் வளர்த்து வந்துள்ளார், அதில் அருகிலுள்ள விவசாயிக்கும் இவருக்கும் முன்விரோதம் இருந்த வந்த நிலையில் இன்று காலை 5 கோழி இறந்த நிலையில் கிடந்துள்ளது. மேலும் ஐந்து கோழி குஞ்சுகள் காணாத நிலையில் விஷம் வைத்ததனால் இறந்திருக்கும் என்று வாழப்பாடி போலீலாரிம் பெரிசாமி கொடுத்த புகாரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கால்நடை மருத்துவர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்,

சேலம் பூ மார்க்கெட் விலை நிலவரம்
7/10/2022

1.மல்லி =,600
2.முல்லை=400
3.ஜாதிமல்லி=280
4.காக்கட்டான்=200
5.கலர் காக்கட்டான்=160
6.அரளி =40
7.வெள்ளைஅரளி=40
8.மஞ்சள் அரளி =40
9.செவ்வரளி =60
10.ஐ.செவ்வரளி. =60
11.நந்தியாவட்டம் =30
12.சி.நந்திவட்டம் =30
13.சம்மங்கி =60
14.சாதா சம்மங்கி =60

மேட்டூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் போனஸ் கேட்டு உண்ணாவிரதம்.மேட்டூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. குப்பைகளை அள்ளும் பணியில் 161 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 99 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர்.  இவர்களுக்கு குப்பைகளை 24 வகையாக பிரிக்கச் சொல்லி பணிச்சுமை ஏற்படுத்துவதை கண்டித்தும், தூய்மை பணியாளர்களுக்கு 8.33 சதவிகித போனஸ் வழங்க வேண்டியும்,பணிக்கான கருவிகள், கையுறை பூட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்க கோரியும் இன்று ஒரு நாள் உண்ணாவிரதில் ஈடுபட்டு உள்ளனர். மேட்டூர் நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெறும் இந்த உண்ணா விரத போராட்டத்திற்கு சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க நிர்வாகி கருப்பண்ணன் தலைமை வகித்தார். தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டன. நகரில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.