மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,419 கன அடி.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,419 கன அடி வீதம் வந்து கொண்டிருந்து நீரின் (நேற்று மாலை வினாடிக்கு 17,777 கன அடி). இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  வினாடிக்கு 15,000 கன அடி வீதமும்  கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.72  கன அடியாகவும் நீர் இருப்பு 91.44 டி.எம்.சியாகவும் உள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயர தொடங்கியுள்ளது.

சித்தர் கோயிலின் வளர்ப்பு கன்று குட்டி கிணற்றில் விழுந்து பலி.

சேலம் மாவட்டம், கஞ்சமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சித்தர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பசுமாடு மற்றும் சிந்து மாடு கன்று குட்டிகளை விட்டுச் செல்கின்றனர் . தற்போது பத்துக்கு மேற்பட்ட கன்று குட்டிகள் இங்கு வளர்ந்து வருகிறது. இந்த கன்று குட்டிகளுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் எந்த ஒரு பராமரிப்பும் செய்யப்படுவதில்லை என பக்தர்கள் பலமுறை குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இரண்டு வருட கன்று குட்டி சாலை விபத்தில் அடிபட்டு இறந்தது . இதனைத் தொடர்ந்து ஒன்றரை வயது உள்ள கன்று குட்டி சித்தர் கோவில் அருகே 30 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்து இறந்தது.இந்த கன்றுக்குட்டி சேலம் தீயணைப்பு படை வீரர்களால் மீட்கப்பட்டது. இது குறித்து பக்தர்கள் கூறுகையில், இங்கு சாமிக்கு நேர்த்திக்கடனாக விடப்படும் கன்று குட்டிகளை கோசாலை அமைத்து பாதுகாக்கப்பட வேண்டுமென பலமுறை தெரிவித்தும் கோயில் நிர்வாகத்தினர் கண்டு கொள்ளாததால் அடிக்கடி கன்று குட்டிகள் இறந்து வருகின்றது  என்றும், கன்று குட்டிகளுக்கு பக்தர்கள் கோசாலை அமைத்து கொடுக்க முன்வந்தும், இதனை மறுத்து வரும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், மேலும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் சித்தர் கோயில் நிர்வாகத்தை நேரில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

அஸ்தம்பட்டி உழவர் சந்தை

1. தக்காளி ரூ 30-38
2. உருளைக் கிழங்கு ஆக்ரா/ ஊட்டி- -36-50
3. சின்ன வெங்காயம் - ரூ 44-46
4. பெரிய வெங்காயம் - ரூ 26-30
5. பச்சை மிளகாய் ரூ-46-48
6. கத்தரி ரூ 26-32
7. வெண்டைக்காய் -ரூ:34-30
8. முருங்கை காய் -ரூ 80-100
9. பீர்க்கங்காய் -ரூ 48-46
10. சுரக்காய்- ரூ 20-24
11. புடலங்காய் - ரூ32
12. பாகற்காய் - ரூ 46
13. தேங்காய் - ரூ 25-30
14. முள்ளங்கி - ரூ 20-18
15. பீன்ஸ் - ரூ 75-80
16. அவரை - ரூ 34-44
17. கேரட் - ரூ 90-100
18. வெற்றிலை - இல்லை
19. மாங்காய் - 80-100
20.மாம்பழம்-ரூ இல்லை
20. வாழைப்பழம் - ரூ 30- 60                                                                                                                                                                                                                                                                                                      21.கீரைகள் - ரூ20-24
22.பப்பாளி - ரூ 25
23.கொய்யா-ரூ40-35
24. மாதுளை -இல்லை
25.ஆப்பிள் - இல்லை
26.சாத்துக்குடி - இல்லை

 

ஆத்தூர் உழவர் சந்தை

1. தக்காளி - ரூ25-30-35
2. உருளைக் கிழங்கு ஆக்ரா- ரூ.40 ஊட்டி-ரூ.45
3. சின்ன வெங்காயம் - ரூ.35-44
4. பெரிய வெங்காயம் - ரூ.22-30
5. பச்சை மிளகாய்- ரூ.42-45
6. கத்தரி-ரூ.20-25-28
7. வெண்டைக்காய் - ரூ.18-20
8. முருங்கை காய் - ரூ.60-70
9. பீர்க்கங்காய் -ரூ.45-48
10. சுரக்காய்- ரூ. 10-12-15
11. புடலங்காய் - ரூ.22-25
12. பாகற்காய் - ரூ.42-45
13. தேங்காய் - ரூ. 25-30
14. முள்ளங்கி - ரூ. 18-20
15. பீன்ஸ் - ரூ.60-65
16. அவரை - ரூ.40-45-50

17. a.ஊட்டி கேரட் 🥕 - ரூ.90-95
     b.கருமந்துரை கேரட் 🥕- ரூ.55-60

18. வெற்றிலை - இல்லை
19. மாங்காய் - ரூ.50-70
20.மாம்பழம்-ரூ இல்லை
20. வாழைப்பழம் - ரூ 30-45
21.கீரைகள் - ரூ.20-24
22.பப்பாளி - ரூ.15- 20
23.கொய்யா-ரூ.30-35-40
24. மாதுளை -இல்லை
25.ஆப்பிள் - இல்லை
26.சாத்துக்குடி - இல்லை